Categories
உலக செய்திகள்

‘பாதுகாப்பது எங்களின் கடமை’…. சிங்கப்பூர் சென்ற துணை அதிபர்…. பசுபிக் நாடுகளுடன் பேச்சுவார்த்தை….!!

ஆப்கானின் நிலைமை குறித்து பசுபிக் நாடுகளுடன் அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சிக்கியுள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். இது போன்று ஆப்கானில் நிலவும் மோசமான சூழ்நிலைக்கு காரணம் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டது தான் என்று பல்வேறு உலக நாடுகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அரசு முறை சுற்றுப்பயணமாக ஒரு வாரத்திற்கு முன்பு சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு பசுபிக் நாடுகளுடன் ஆப்கானிஸ்தானின் நிலைமையை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மேலும் 20 ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்கா நேட்டோ படைகள் திரும்பப் பெறப்பட்டது குறித்து தெளிவான விளக்கத்தையும் அளித்துள்ளார். அதற்காகவே அவர் ஆசிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியதாவது “அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் தலைமை வகிக்கிறது. ஆகவே எங்களின் பொறுப்பை உணர்ந்து சரியாக செயல்படுவோம். மேலும்  அமெரிக்கா ராணுவம் ஆப்கானை விட்டு வெளியேறினாலும் அந்நாட்டை பாதுகாப்பது எங்களின் கடமை. அதிலும் ஆசிய நாடுகளை ஆப்கானில் இருந்து வெளியேற்றும் போது எந்த ஒரு பாதிப்பும் இல்லாத வகையில் அமெரிக்கா அதனை பாதுகாக்கும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |