Categories
உலக செய்திகள்

ஆப்கானின் இந்த நிலைக்கு காரணம் இவங்கதான் …. சீனாவின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

ஆப்கானில் மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்கா,பிரித்தானியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மீது சீனா குற்றம்சாட்டியுள்ளது .

ஜெனிவாவில் உள்ள ஐநாஅலுவலகத்துக்கான சீனத் தூதர் சென் சூ ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலிடம் அமெரிக்கா , பிரிட்தானியா மற்றும் ஆஸ்திரேலியாவின் ராணுவத்தினர் ஆப்கானில் நடத்திய மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இராணுவ படைகளின் சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கும் மேற்கண்ட நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏறக்குறைய 20 ஆண்டு ராணுவ பிரச்சாரம் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அல்ல என்றும் ,இது நாட்டின்  நலன் மற்றும் சம்பந்தப்பட்ட மக்களின் மனித உரிமைக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. இதையடுத்து ஜனநாயகம் மற்றும் மனித உரிமை என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் மற்ற பிற நாடுகளின் ராணுவத் தலையீடுகளை  மேற்கொள்கின்றது. இதனால் மிகவும் மாறுபட்ட வரலாறு ,கலாச்சாரம் கொண்ட நாடுகளில் தங்களுடைய சொந்த கோட்பாட்டை திணிக்கின்றன. இந்த செயல் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியது என சீன தூதர் சென் சூ கூறியுள்ளார்.

Categories

Tech |