நூற்பாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அயோத்தி ராம் நகரில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தில் உள்ள பஞ்சு மார்க்கெட் அருகே நூற்பாலை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 22 – ஆம் தேதியன்று பலத்த மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆழையை மூடி விட்டு சென்றுள்ளனர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து மின்சாரம் மீண்டும் வந்த போது மின் கசிவின் காரணமாக நூற்பாலையில் தீ விபத்து நேர்ந்துள்ளது.
இதனை அடுத்து பலத்த காற்றினால் மளமளவென தீ பஞ்சு முழுவதும் பற்றி எந்திரங்களுக்கு பரவியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகிவிட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.