Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தீர்மானம் நிறைவேற்றியாச்சு…. சிறப்பாக நடந்த நிகழ்ச்சி…. கட்சியாளர்களின் அதிரடி செயல்….!!

கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மக்கள் நாடாளுமன்றம் நடத்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மக்கள் நாடாளுமன்றம் நடத்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களிடம் கையொப்பம் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளரான எம்.சுந்தரேசன் தலைமை தாங்கி பேசியுள்ளார். அதன்பின் நகர துணைச் செயலாளரான முருகன், பைரோஸ், மயில்வாகனன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனவும், டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை குறைப்பது குறித்தும், ராணுவம் காப்பீடு ரயில்வே வங்கி ஆகிய தொழிற்சாலைகளை தனியாருக்கு கொடுக்கக்கூடாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை உடைக்காத பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். பிறகு தீர்மானங்களை நிறைவேற்றி பின் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதனைப் போல் ஜோலார்பேட்டை சந்தை கோடியூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மக்கள் நாடாளுமன்றம் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ராஜு என்பவர் தேசிய கொடி ஏற்றியுள்ளார்.

இதனையடுத்து தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடி மக்கள் நாடாளுமன்றம் கூட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்ற தலைவரான நகரச் செயலாளர் கே.பி மணி பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து முன்னாள் மாவட்டச் செயலாளர் முல்லை நாடாளுமன்ற விவாதத்தைத் தொடங்கியுள்ளார். மேலும் விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் கே.கே துரைராசன், கிளைச் செயலாளர் ஆர்.எஸ் தருமன் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி தலைவர் வேணுகோபால் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்பட்டு பேசியுள்ளனர்.

Categories

Tech |