சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பில் சிம்பு மற்றும் நடிகை கயாடுலோஹர் இருவருக்கும் இடையிலான காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சிம்பு பத்துதல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார்.