Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கூடுதலாக 3 ஆம்புலன்ஸ்” தீக்குளிக்க முயன்ற உரிமையாளர்…. சேலத்தில் பரபரப்பு…!!

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றார். இந்நிலையில் கொரோனா கால கட்டத்தில் ஆம்புலன்சின் தேவை அதிகரித்ததால் கடன் வாங்கி ராஜா 3 ஆம்புலன்சுகளை கூடுதலாக வாங்கியுள்ளார். தற்போது ஆம்புலன்ஸ் தேவை குறைந்து விட்டதால் போதிய வருமானம் இல்லாமல் ராஜா சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு ராஜாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் பெற்றோலை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் ராஜாவின் மீது தண்ணீரை ஊற்றி விட்டனர். இதனையடுத்து கடன் சுமை அதிகமானதால் ராஜா தீக்குளிக்க முயன்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் டவுன் காவல் நிலையத்திற்கு ராஜாவை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Categories

Tech |