Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஆப்கான் மக்களே… இந்தியாவுக்கு வர வேண்டுமா… உடனே இ-விசா பெறுங்க… மத்திய அரசு..!!

இந்தியாவிற்கு வர விரும்பும் ஆப்கானியர்கள் உடனடியாக இ-விசா பெற வேண்டும் என்று  மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது..

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் முற்றிலும் கைப்பற்றி விட்டனர்.. தலிபான்களின் கொடூர ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள் அனைவரும் விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் விமானங்களில் ஏறி இ-விசா எதுவும் இல்லாமல் அந்நாட்டு மக்கள் தப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவிற்கு வர விரும்பும் ஆப்கானியர்கள் உடனடியாக இ-விசா பெற விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் இந்தியாவிற்குள் இ-விசா பெறுவதன் மூலமாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |