தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பதிலளித்து பேசுகின்றனர்.
இதில் விவசாயிகளுக்கான பயிர்க்கடனை 5 சதவீதம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேசன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் உணவுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.