ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றி விட்டனர். இதனால் தாலிபான் தலைமையிலான அரசு ஆப்கானை வழிநடத்தும் என்பதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவ்வாறு வெளியேறிய மக்கள் விமானங்களில் அடித்து பிடித்து ஏறும் வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆப்கான் மக்களுடைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு பல நாடுகளும் அடைக்கலம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிற்கு வர விரும்பும் ஆப்கானியர்கள் உடனடியாக இ-விசா பெற விண்ணப்பிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் இந்தியாவிற்குள் இ-விசா பெறுவதன் மூலமாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளார்.