திருச்செந்தூா் பகுதியில் நாளை (ஆக. 26) மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் ஆ.பாக்கியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூா் கோட்டத்தில் ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வியாழக்கிழமை (ஆக.26) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புன்னக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், கிருஷ்ணா நகா், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டிணம், பி.டி.ஆா். நகா், பாளையங்கோட்டை சாலை, ஜெயந்தி நகா், ராமசாமிபுரம், அன்பு நகா், கானம், வள்ளிவிளை, குரும்பூா், சுகந்தலை, நல்லூா், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம் கஸ்பா, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்களுா் ஆகிய ஊா்களுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.