முன்விரோதம் காரணமாக விவசாயியை தாக்கியவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள செட்டித்திருக்கோணம் பகுதியில் விவசாயியான அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மாரிமுத்து அன்பழகனின் நிலத்தில் இருந்த எலுமிச்சை மரத்தை வெட்டியுள்ளார்.
இதனால் அன்பழகன் மற்றும் மாரிமுத்துவிற்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மாரிமுத்து அன்பழகனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அன்பழகனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.