Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“உன் தந்தையால் போய்விட்டது” சிறுவனுக்கு நடந்த கொடூரம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

சொத்து தகராறில் வாலிபர் சிறுவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசனூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்ரமணியன் என்ற சகோதரர் இருக்கின்றார். இவர்கள் இருவருக்கும் நிலத்தகராறு காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் மகனான 16 வயது சிறுவன் அப்பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற முருகனின் மகனான தீபன் என்ற வாலிபர் சிறுவனை அவதூறாக திட்டியுள்ளார்.

இதனை அடுத்து உன் தந்தையால் எனக்கு சொத்து இல்லாமல் போய்விட்டது என்று கூறி தன் கையில் வைத்திருந்த அரிவாளால் தீபன் சிறுவனின் பின்கழுத்தில் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீபனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |