சரக்கு வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய், மகன் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நல்லமாச்சத்திரம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியன் சிவகங்கை நோக்கி தனது சரக்கு வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். இதனை அடுத்து திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் மீது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விட்டது.
இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற கார்த்திக் ராஜா மற்றும் அவரது தாயார் செல்வி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.