ஓட்ட பயிற்சி மேற்கொண்டிருந்த போது கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உடையான்பட்டி கிராமத்தில் விக்னேஸ்வரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக தன்னை தீவிரமாக தயார்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரன் மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் ஓட்ட பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் விக்னேஸ்வரன் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.