அதே போல ஆளும் கட்சியான அ.தி.மு.க சார்பில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் ரெட்டியார்பட்டி வி.நாராயணனும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.ஆர். முத்தமிழ்செல்வனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். திமுக சார்பில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நா.புகழேந்தியும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ரூபி மனோகரனும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்து சென்னை பண்பாட்டு மக்கள் கண்காணிப்பு தொடர்பகம் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது. அதில் நாங்குநேரி, விக்கிரவாண்டி , காமராஜர் நகர் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் திமுக கூட்டணியே வெற்றிபெறும் என்று தெரியவந்துள்ளது. மேலும் அதில் நடிகர் ரஜினி போட்டியிட்டால் ஆதரவு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு இல்லை என 66.3 சதவீதம் பேர் பதில் அளித்துள்ளனர். இதனால் திமுகவினர் மகிழ்ச்சியாகவும் , ரஜினி மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.