சட்டப்பேரவையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். இந்நிலையில் காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் பேசுகையில், தமிழக அரசு பட்ஜெட்டில் மக்கள் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. குறிப்பாக பனை தொழில் வளர்ச்சிக்காக 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும் என்றும், ஒரு லட்சம் பனங் கன்றுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாவப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு ரேஷன் பொருட்களும் கிடைக்காத வகையில் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை வசதி படைத்தவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும் வகையிலான கார்டுகள் வழங்கப்பட்டன. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சரியான குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாகவும், கார்டுகளை முறைப்படுத்த வேண்டும் என்றும் உறுப்பினர் தெரிவிக்கிறார் அவருடைய கோரிக்கை நிறைவேற்றப்படும். ரேஷன் பொருட்கள் தகுதியானவர்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.