மக்கள் பலர் பன்றி இறைச்சியால் தயாரிக்கப்பட்ட ஸ்னாக்ஸ் சாப்பிட்டதால்தான் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் Tayto Group எனும் ஸ்னாக்ஸ் தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தில் பன்றி இறைச்சியால் தயாரிக்கப்பட்ட Mr. Porky brand Scratchings உணவை சாப்பிட்ட மக்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஸ்நாக்சில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி கண்களுக்கு தெரியாமல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சால்மோனெல்லா நோய்க்கிருமி உணவை பாதித்துள்ளது வெறும் கண்ணால் பார்க்கும் போது புலப்படாது. அந்த சால்மோனெல்லா கிருமி தொற்று குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்கள் போன்றோரை பாதித்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆரோக்கியமான உடல்நிலை கொண்ட மக்களை பாதித்தால் காய்ச்சல், தலைவலி, தலைசுற்றல், வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இவ்வாறு Mr. Porky brand Scratchings போன்ற சில ஸ்னாக்ஸ் பாக்கெட்டுகளில் சால்மோனெல்லா நோய்க்கிருமி இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதனால் அந்த ஸ்னாக்ஸ் தயாரித்த நிறுவனமே உணவைத் திருப்பிக் கொடுக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. பிரித்தானியாவில் சால்மோனெல்லா கிருமித்தொற்று 179 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 50 பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைதொடர்ந்து சால்மோனெல்லா நோய்த்தொற்று காரணமாக ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பொது சுகாதாரத்துறைகள் எல்லாம் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கனடாவிலும் Morgan Williams International Inc என்னும் நிறுவனத்தில் பன்றி இறைச்சியால் தயாரிக்கப்பட்ட Mr. Porky brand Original Scratchings ஸ்நாக்ஸ்களில் சால்மோனெல்லா நோய்க்கிருமி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, அந்த நிறுவனமும் உணவை திருப்பிக் கொடுக்குமாறு அல்லது தூர எறிந்து விடும்மாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.