மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜோராஓசூர் கிராமத்தில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் காட்டு யானை ஒன்று இந்த தோட்டத்திற்கு சென்றுள்ளது. அப்போது மின் வேலியில் சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில் உணவு தேடி வந்த இந்த காட்டு யானை மின்வேலியை கடந்து தோட்டத்திற்குள் நுழைய முயற்சி செய்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி யானை இறந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த யானையை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பிறகு வனத்துறையினர் அதே இடத்தில் குழி தோண்டி புதைத்து விட்டனர். மேலும் தலைமறைவான ஜேம்ஸ் என்பவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.