உலக டெஸ்ட் சாம்பியன் பட்டியலில் இந்தியா 14 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது .
கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடங்கி 2021-ம் ஆண்டு வரை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டிக்கு இந்தியா ,நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. கடந்த ஜூன் மாதத்தில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன .இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. இதன் பிறகு தற்போது மீண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் முதல் போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி டிரா ஆனது.
இதனால் இந்திய அணிக்கு 4 புள்ளிகள் வழங்கப்பட்டது. இதில் மொத்தமாக 16 புள்ளிகளைப் பெற வேண்டிய இந்திய அணி ஓவர்களில் மெதுவாக பந்து வீசியதால் இரண்டு புள்ளிகளை இழந்தது. அத்துடன் ஐசிசியின் விதிப்படி ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 2 புள்ளிகளும், போட்டி டையில் முடிந்தால் 6 புள்ளிகளும் ,போட்டி டிராவில் முடிந்தால் 4 புள்ளிகளும் ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்படும். அதன்படி 14 புள்ளிகளைப் பெற்று இந்தியா முதலிடத்திலும் 12 புள்ளிகளைப் பெற்று பாகிஸ்தான் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது .இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 12 புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்திலும் , 2 புள்ளிகளை பெற்று இங்கிலாந்து அணி 4-வது இடத்திலும் உள்ளது.