ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் பரோல் மனு மீது 3 வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுவிட்டுள்ளது.
விருதுநகர் அருப்புக்கோட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனது மகன் ரவிச்சந்திரன் 27 ஆண்டுகளாக சிறையில்இருக்கிறார். இவர் நான்கு முறை மட்டுமே பரோலில் வந்துள்ளார். குறிப்பாக ஏழு ஆண்டுகள் , 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும் ஒருவர் முன்கூட்டியே விடுவிக்க வாய்ப்பு இருந்தும் அரசியல் பிரச்சினை காரணமாக எனது மகன் உள்ளிட்டோர்கள் சிறையில் இருந்து வருகின்றார்கள்.
கடந்த 2018_ஆம் ஆண்டு நீண்ட நாள் பரோல் கேட்டு மனுதாக்கல் செய்தபோது அதற்கு சாத்தியமில்லை என்று சொன்னதால் கடந்த மார்ச் 27_ஆம் தேதி ஒரு மாதம் பரோல் கேட்டு புதிதாக மனுத் தாக்கல் செய்யும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் , ஆனந்த வெங்கடேசன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மனுவை 3 வாரத்துக்குள் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.