Categories
தேசிய செய்திகள்

6- 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு….. குஜராத் அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் 6-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது.

Categories

Tech |