கொடைக்கானல் தமிழ்நாடு படகு இல்லத்தில் படகு சேவைக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலில் படகு இல்லத்தில் படகு சேவைக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
வார நாட்கள், வார இறுதி நாட்கள் என தனித்தனி கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலா பயணிகள் புகார் அளித்தனர்.வார நாட்களில் 100 ரூபாய் வசூலிக்கப்படும் கட்டணம் 150 ரூபாய் ஆகவும், வார இறுதியில் 200 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என புகார் எழுந்துள்ளது. மேலும் வரிசையில் நிற்காமல் உடனே படகில் ஏற விரும்பினால் ரூ.250 கட்டணம் வசூலிக்க படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.