தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பதிலளித்து பேசினர். இதில் விவசாயிகளுக்கான பயிர்க்கடனை 5 சதவீதம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் பயிர்க் கடன் வழங்கியதில் ரூ.516 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். சிட்டா அடங்கலில் குறிப்பிடப்பட்ட சாகுபடி நிலங்களின் பரப்பளவை அதிகரித்து சுட்டிகாட்டி பல மடங்கு கூடுதல் கடன் பெற்றுள்ளனர் என்றும், சேலம், நாமக்கல்லில் மட்டும் ரூபாய் 503 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது என்றும் கூறியுள்ளார்.