கோவில்பட்டி அடுத்த குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ள 17 கவுன்சிலர் பதவிகளையும் கைப்பற்றி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காணிக்கையாக்கும் விதத்தில் பணியாற்ற வேண்டும் என மதிமுகவினருக்கு வைகோவின் மகன் துரை வைகோ அறிவுறுத்தியுள்ளார். இளையரசனேந்தலில் மதிமுக சார்பில் குருவிகுளம் ஒன்றிய அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரைவைகோ பங்கேற்று பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இப்பகுதியில் உள்ள 17 கவுன்சிலர் பதவிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.