ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரிக்கான கட்டண விலை உயர்ந்துள்ளது. அதன்படி இரண்டு நபர்கள் பயணிக்கும் மிதிபடகிற்கு 250 ரூபாயும், நான்கு பேர் பயணிக்கும் மிதிபடகிற்கு 350 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 4 நபர்களுக்கான துடுப்பு படகிற்கு 400 ரூபாயும், 6 பேர் பயணிக்கும் துடுப்பு படகிற்கு 450 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
8 பேர் பயணிக்கும் மோட்டார் படகிற்கு 800 ரூபாயும், 10 பேர் பயணிக்கும் மோட்டார் படகிற்கு 1000 ரூபாயும், 15 பேர் பயணிக்கும் படகிற்கு 1400 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வரிசையில் நின்று படகு சவாரி செய்வதை தவிர்க்கவும், உடனடியாக படகு சவாரி செய்ய எக்ஸ்பிரஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 600 வரை வசூலிக்கப்படுகிறது. அனைத்துவிதமான படகு சவரிகளுக்கு அனைத்து வார இறுதி நாட்களில் 100 முதல் 400 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.