Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதுவுமே சரியாக செய்யவில்லை…. பூட்டப்பட்ட அலுவலகம்…. மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!

ஊராட்சி செயலாளரை பணி இடமாற்றம் செய்யக் கோரி பொதுமக்கள் அலுவலகத்தை பூட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னகம்மியம்பட்டு பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருட்செல்வி என்ற மனைவி உள்ளனர். இவர் அதே பகுதியில் இருக்கும் ஊராட்சியில் 25 வருடங்களுக்கும் அதிகமாக செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சி செயலாளர்களை பணி இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதனால்  இப்பகுதியின் ஊராட்சி செயலாளரான அருட்செல்வி பெரியகம்மியம்பட்டு ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அருட்செல்வி தனது கணவனுக்கு விபத்தில் முதுகு தண்டுவடம் அடிபட்டிருப்பதினால் அவரை கவனித்துக் கொள்வதற்காக பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்து அதே ஊரில் வேலை பார்த்து வருவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து குடிநீர் வினியோகம், அடிப்படை வசதிகள் போன்றவைகளை முறையாக செய்து தரவில்லை எனக்கூறி அலுவலகத்தை பூட்டி விட்டு சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி கையெழுத்து போட்டு தந்தாள் உரிய அதிகாரிகளிடம் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மனுவை கொடுத்துவிட்டு பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |