வைக்கோல் படப்பில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனது சொந்தமான இடத்தில் மாடுகளுக்கு உணவளிப்பதற்காக வைக்கோல் படப்புகளை வைத்துள்ளார். இந்நிலையில் அந்த வைக்கோல் படப்பில் திடீரென தீப்பற்றியது. அதன்பின் அந்த இடத்திலிருந்த 4 வைக்கோல் படப்புகளும் தீயில் எரிந்து நாசமானது.
இதனை பார்த்த சங்கரன் அதிர்ச்சியடைந்துநாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பாய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வைக்கோல் படப்பில் எப்படி தீ பிடித்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.