Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. எல்லாரும் ஏமாத்துறாங்க… ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரிவிதிப்பு குழுவை அமைக்கும் பணி ஊரக வளர்ச்சி துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் வளையக்காரனுர்  கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் சொத்து வரி செலுத்தும் படி தட்டாங்குட்டை கிராம பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி வர்த்தக ரீதியில் செயல்படும் கட்டிடங்களுக்கு கூடுதல் சொத்து வரி விதிக்க கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி, கல்லூரி நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.  மேலும் வழக்கு விசாரணையின் போது தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்கள் சொத்துவரி செலுத்தாமல் ஏமாற்றி வருவது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது சுட்டிக்காட்டிய நீதிபதி, அதிக கட்டணம் வசூலித்து வணிக நோக்கில் செயல்படும் வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் வரி செலுத்த தயங்குவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நிலவுவதாக குறிப்பிட்ட நீதிபதி, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரி விதிப்பு குழுவை அமைக்கும் படி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

சொத்துவரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களின் விவரங்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கி விபரங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறிவிப்பு பலகைகளிலும் இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். சொத்துவரி மதிப்பீடு வரிவசூல் போன்ற நடவடிக்கைகளில் மெத்தன போக்கு மற்றும் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |