சென்னை மாநகர காவல் ஆணையத்தை இரண்டு தலைமையாக வைத்து நிர்வாக பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதர்க்காக அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நகரின் மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க நாளுக்கு நாள் பெருகி வரும் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்க்கான முனைப்புகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் காவல்துறையில் சென்னை மாநகர காவல்துறை இரண்டாக பிரிப்பதர்க்கான முனைப்பு எடுத்திருகிறார்கள். ஒன்று சென்னை நகருக்குள் உள்ளாக இருக்ககூடிய சென்னை எழும்பூரில் இருக்கக்கூடிய தலைமை அலுவலகத்தை கொண்டு கமிஷனர் அலுவலகம் ஒன்றாகவும், புறநகர பகுதிகளை உள்ளடக்கி அதை தனியாக புறநகர கமிஷனர் அலுவலகமாக இரண்டாக பிரிப்பதர்க்கான முடிவு எடுத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே திராவிட முன்னேற்ற கழகம் 2008ஆம் ஆண்டு ஆட்சி பீடத்திற்கு வந்த போது இந்த புதிய நடைமுறையை கொண்டு வந்தது. அப்போது சென்னையினுடைய புறநகர பகுதி இரண்டாவது கமிஷனர் அலுவலகம் துவங்கப்பட்டு அதற்கு திரு ஜாங்கிட் அவர்கள் புதிய கமிஷனராக புறநகர கமிஷனராக இருந்து வந்தார். எனவே அது காலபோக்கில் மீண்டும் அதிமுக ஆட்சி வந்தபிறகு அதை தவிர்த்து விட்டு மீண்டும் ஒரே நிர்வாகம் என்பதான நிலை இருந்தது. ஆனால் இப்போது திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான புதிய ஆட்சி வந்த பிறகு தற்போது மீண்டும் சென்னை காவல்துறை ஆணையத்தை இரண்டாக பிரிப்பதர்க்கான முனைப்பு எடுத்திருகிறார்கள்.
அப்படி பிரிக்கபடுகிற போது சென்னை எல்லைக்குள் இருக்கக்கூடிய பகுதியெல்லாம் சென்னை மாநகர எல்லைகளெல்லாம் எழும்பூரில் இருக்கக்கூடிய தற்போதைய கமிஷனர் அலுவலகத்திலே பணிகள் தொடரும். சென்னையினுடைய புறநகர பகுதியாக இருக்கக்கூடிய குறிப்பாக அம்பத்தூர், மாதாவரம் இப்படியாக புறநகர பகுதிகளாக இருக்கக்கூடிய பகுதிகளெல்லாம் வைத்துக்கொண்டு தனி அலுவலகமாக பிரிக்கப்பட்டு அங்கு புதிய கமிஷனர் ஒருவரை நியமிப்பதர்க்கான பணிகள் ஏற்பாடு செய்வதற்க்கான முனைப்புகளையும் அரசு எடுத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அப்படி கொண்டுவரப்பட்டால் என்ன நடக்கும் என்று சொன்னால் பொதுவாகவே இங்கே வருகின்ற குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், அதனுடைய வழக்குகள் எல்லாம் காலப்போக்கிலே நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகின்ற விஷயங்கள் எல்லாம் உடனடியாக தீர்வு செய்வதற்க்கான முனைப்பாக இருக்கும் என்றும், நிர்வாக ரீதியாக பல்வேறு விஷயங்களில் உறுதுணையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. ஏன் என்று சொன்னால் பெரிய நகரங்களாக இருக்கக்கூடிய மும்பை, பெங்களூர் ஹைதராபாத் போன்ற நகரங்களில் எல்லாம் இதுபோன்ற பணிகளை மேற்கொண்டு சென்னையிலும் புறநகர பகுதிகளில் இப்படிப்பட்ட நடைமுறையை இன்றைக்கு தமிழக காவல்துறை முன்னெடுத்து இருக்கின்றது. விரைவில் சென்னை 2 கமிஷனர் அலுவலகமாக பிரிக்கப்பட்டு அதற்கு புதிய கமிஷனர் ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருப்பவர் ஒரு புறநகர கமிஷனராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.