Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“தடையை மீறினால் நடவடிக்கை” உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

இரவு 10 மணிக்கு மேல் மதுபானக் கூடங்கள் இயக்கினால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது மதுபான கூடங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து ராணிப்பேட்டையில் திறக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் வருகிற 6ம் தேதி வரை தனியார் மதுபான கூடங்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி பார்கள் இயங்கினால் அந்தந்த உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிளாஸ்ட்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |