வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் .
தமிழ் திரையுலகில் கடந்த 2007- ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இதை தொடர்ந்து இவர் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Whatta wonderful hospitality!! Thank q chief @KicchaSudeep !! U r an amazing cook!! Looking forward for our next;)) advance happy birthday!! pic.twitter.com/bArafom1fM
— venkat prabhu (@vp_offl) August 24, 2021
மேலும் சமீபத்தில் கிச்சா சுதீப்பை நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘என்ன ஒரு கவனிப்பு. நன்றி கிச்சா சுதீப். நீங்கள் ஒரு அற்புதமான சமையல் நிபுணர். நம்முடைய அடுத்த படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .