Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ இறுதிகட்ட படப்பிடிப்பு… ரஷ்யா கிளம்பிய அஜித்… தீயாய் பரவும் வீடியோ…!!!

நடிகர் அஜித் வலிமை படத்தின் படப்பிடிப்பிற்காக ரஷ்யா கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கார்த்திகேயா, யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ், சுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

https://twitter.com/thisis_paddy/status/1430454710725603328

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் ரஷ்யாவிற்கு ஏர்போர்ட்டிலிருந்து கிளம்பும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |