Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க துணைநிலை ஆளுநருக்கு முதல்வர் அழைப்பு…!!

பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்க உள்ளது.

பிற்பகல் சட்ட சபை துணைத் தலைவர் தேர்வு நடக்க உள்ள நிலையில் மாலை நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் முறைப்படி துணை நிலை ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க முதலமைச்சர் ரங்கசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

Categories

Tech |