Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

குரூப் 2 புதிய பாடத்திட்டம்….. ”உடனே பரிசீலியுங்க”….. Tnpsc_க்கு நீதிமன்றம் உத்தரவு …!!

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வை பழைய முறையில் நடத்த கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த அப்பாஸ் என்பவர் மதுரை மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்ததி  குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டதில் 100 வினாக்கள் நீக்கம் செய்யபட்ட்டது குறித்து தெரிவித்திருந்தார்.அதாவது TNPSC எனும் தமிழநாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்  குரூப் 2 தேர்வில் கேட்கப்படும் 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்திலும் ,  மீதமுள்ள 100 கேள்விகள் பொதுஅறிவு பாடத்திட்டமாகவும் இருக்கும்.ஆனால் புதிதாக TNPSC அறிவித்துள்ள குரூப் 2  புதிய பாடத்திட்டத்தில் மொழிப்பாடங்கள் நீக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிய பாடத்திட்டத்தின்படி 175 பொதுஅறிவு கேள்விகளும் , 25 கேள்விகள் திறனறிவுக் கேள்வியாகவும் புதிய பாடத்திட்டம் உள்ளது.

எனவே இதை குறிப்பிட்டு அந்த மனுவில் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் , கிராமப்புற மாணவர்கள் அதிகமானோர் குரூப் 2 தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் தமிழ் வினாக்கள் நீக்கப்பட்ட்து  மிகுந்த சிரமத்தை உண்டாக்கும். ஆகவே குரூப் 2 தேர்வுக்கான பாடத் திட்டத்தில் 100 மதிப்பெண் களுக்கான தமிழ் வினாக்கள் நீக்கப்பட்டது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டுமென்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் , கிருஷ்ணசாமி இதுகுறித்து தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் இந்த மனு தொடர்பாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று என்று உத்தரவிட்டார்.

Categories

Tech |