கோவில் நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்ததை ரத்து செய்து பொதுமக்களிடம் ஒப்படைக்க எமபள்ளி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செங்கோட்டை அடுத்துள்ள எமப்பள்ளி சங்கல்ப கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு 6000 சதுர அடி நிலத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பாக கோவிலில் நிலம் புறம்போக்கு நிலம் என்று பட்டா போட்டு ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு தெரியாமல் எப்படி கோவில் நிலத்தை புறம்போக்கு நிலம் என்று பட்டா போட்டு கொடுத்திருக்க முடியும் என்றும், இதை ரத்து செய்து கோவில் நிலத்தை பொதுமக்களுக்கு பட்டா போட்டு தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி உள்ள பொதுமக்கள் கூறும்போது கோவிலுக்கு சொந்தமான நிலத்தை எங்களுக்குத் தெரியாமலேயே 6 மாதங்கள் முன்பு பட்டா போட்டு கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது எங்களுக்கு தெரியாது என கூறியுள்ளனர். இதனை அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் எப்படி பட்டா போட்டு கொடுக்க முடியும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த பட்டாவை ரத்து செய்துவிட்டு கோவிலில் இடத்தை கோவிலுக்கே சேர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.