Categories
மாநில செய்திகள்

வரும் 27 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு நிறுத்தம்…. பயணிகள் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் ரயில் பயணத்திற்கான டிக்கெட் விற்பனையை ஐஆர்சிடிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.  டிக்கெட் முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் விவரங்களை டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு கட்டுப்பாட்டு மையங்கள் மூலமாக நிர்வாகம் செய்து வருகிறது. தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே ஆகிய மண்டலங்களுக்கான டிக்கெட் கட்டுப்பாட்டு மையம் சென்னை மூர்மார்க்கெட் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த மையமானது அந்த கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு மாற்றப்பட உள்ளதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தி வைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வரும் 27ம் தேதி அதிகாலை 12.15 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே மண்டலங்கள் டிக்கெட் முன்பதிவு நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |