Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும்…!!

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும், அதனால் மீண்டும் இதில் மறு மதிப்பீட்டு முறையை நடத்தப்படாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு மொத்தம் இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், இரண்டாம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராவும் பணிபுரியலாம்.

இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள் வரை நீட்டித்து உத்தரவிட்டதர்க்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணையை அரசின் முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |