Categories
தேசிய செய்திகள்

உங்களுடைய எல்ஐசி பாலிசி காலாவதியாகிவிட்டதா…? கவலைப்படாதீங்க… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

எல்ஐசி வாடிக்கையாளர்கள் தங்களது காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சலுகைகளுடன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பலர் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்தும், போதிய வருமானம் இன்றியும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும், எல்ஐசி பாலிசிதாரர்கள் தமது காப்பீட்டு ப்ரீமியத் தொகையை செலுத்துவதையும், நிறுத்திவிட்டனர். அவர்களுக்கு உதவும் வகையில், இந்தியாவின் பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் சலுகைகளை தற்போது பாலிசிதாரர்களுக்கு வழங்கியுள்ளது.

இந்தச் சலுகை அக்டோபர் 22ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி ப்ரீமியம் செலுத்தப்பட்டு ஐந்து வருடத்துக்கு மேல் ஆகாத பாலிசிகளை இந்த சலுகையைப் பயன்படுத்தி புதுப்பித்துக்கொள்ள இயலும். இவ்வாறு பாலிசிகளை புதுப்பிக்கும் போது அபராதம் விதிக்கப்படுவது வழக்கமாகும். இந்த அபராத கட்டணத்திலும் சில சலுகைகளை எல்ஐசி வழங்குகிறது. அதன்படி செலுத்த வேண்டிய ப்ரீமியத் தொகை ரூ.1 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், அதற்கான அபராதத் தொகையில் 20 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யப்படும். அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் வரை அபராதத் தொகையில் தள்ளுபடி வழங்கப்படும் என்று எல்ஐசி அறிவித்துள்ளது.

Categories

Tech |