Categories
தேசிய செய்திகள்

உ.பியில் விவசாயிகள் போராட்டம்…. 40 ரயில்கள் ரத்து…!!!

மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் பல மாதங்களாகப் போராடி வருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைத்தபாடில்லை. இதனைத்தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் 3 புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தற்போது போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மொராதாபாத் பகுதியில் நேற்று ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தை தொடங்கினர். இதை எதிர்பார்க்காத ரயில்வே நிர்வாகம் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அந்தப் பகுதியில் செல்லும் 40 ரயில்களை ரத்து செய்துள்ளது. மேலும் முன்பதிவு செய்தவர்களுக்கு தொகை திருப்பி அனுப்பப்படும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |