Categories
தேசிய செய்திகள்

4 முதல் 5ம் வகுப்புகளுக்கு…. செப்-1 முதல் பள்ளிகள் திறப்பு…. ஹரியானா அரசு அறிவிப்பு…!!!

ஒரு நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளை மாநில அரசுகள் திறந்து வருகின்றன. இந்த நிலையில்  ஹரியானா மாநிலத்தில் கொரோன பரவல் குறைந்து வருவதன் காரணமாக செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அந்த மாநில அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது .

மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி,  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சமூக இடைவெளி, முக்க் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |