ரயிலில் பயணம் செய்வதற்கு ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செல்போன் ஆப் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளை புக்கிங் செய்யலாம். அதைத்தாண்டி அதிகமாக புக் செய்வதாக இருந்தால் அதற்கு சம்பந்தப்பட்டவரின் ஆதார் கார்டு இணைக்க வேண்டியது இருக்கும். இந்நிலையில் இந்த விதிமுறை விரைவில் மாற இருக்கிறது.
அது என்னவென்றால் இனி ஒவ்வொரு டிக்கெட் முன்பதிவுக்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட உள்ளது. டிக்கெட் புக்கிங் செய்யும் போது முதலில் ஆதார் விவரங்கள் கொடுக்கப்படவேண்டும். அதுமட்டுமல்லாமல் பான் கார்டு அல்லது பாஸ்போர்ட் விவரங்களையும் கொடுக்க வேண்டியது இருக்கும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதால் இது மாதிரியான புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு துறை பொது இயக்குனர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.