இத்தாலியில் உள்ள சலேமி பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்படும் என அந்நாட்டின் மேயர் அறிவித்துள்ளார்.
இத்தாலி நாட்டில் சிசிலி என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் உள்ள சலேமி பகுதியில் மிகக் குறைந்த விலைக்கு வீடுகள் அரசாங்கத்தால் ஏலம் விடப்பட்டுள்ளது. அதாவது ஒரு யூரோவிற்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 87 ஏலம் விடப்பட்டுள்ளது. அதன்பின் கடந்த 1968 ஆம் ஆண்டு சலேமி பகுதியில் மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். இதனால் சலேமி பகுதியில் மக்கள் தொகை மிகவும் குறைந்துள்ளது.
இதனையடுத்து முன்பு போலவே சலேமி பகுதியில் மக்கள் அதிக அளவில் குடியேற வேண்டும் என்ற எண்ணத்தில் அரசாங்கம் வீடுகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றது. மேலும் இந்த விதிமுறையானது வரும் 28 ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று இத்தாலி நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சலேமி பகுதியின் மேயர் கூறியதாவது “சலேமி பகுதியில் 400க்கும் அதிகமான வீடுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் மக்கள் வீடுகளை வாங்க விரும்பவில்லை. அதனால் சலேமி பகுதி விரைவில் சுற்றுலா தளமாக மாற்றப்படும்” என அறிவித்துள்ளார்.