தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு மக்களும் ஆர்வமாக செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று 400 சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று 400 சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. 200 வார்டுக்கு 2 தடுப்பூசி முகாம்கள் வீதம் என 400 சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.