மயிலாடுதுறையில் உள்ள வர்த்தகர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களும் இம்மாத இறுதிக்குள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வின்போது வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுதற்கான உரிய ஆவணத்தை காண்பிக்க வேண்டும் எனவும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் வர்த்தக நிறுவனங்களில் ஊழியர்கள் பணிபுரிந்தால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் லலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.