தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் உள்ளிட்ட இடங்களில் திருடர்களை பல்வேறு கேமராக்கள் மூலம் கண்காணித்து பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை வடக்கு தெற்கு மற்றும் மேற்கு மாம்பல சாலைகள், ரங்கநாதபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் சாதாரண நாட்களிலே கூட்டம் அலைமோதும் பட்சத்தில் தீபாவளி நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் இருக்கும். இதன் காரணமாக அப்பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த காவல்துறையினர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரயில் நிலையம் போத்தீஸ் ரங்கநாதபுரம் சந்திப்பு ஆகிய 3 முக்கிய இடங்களில் 3-phase கேமரா பொருத்தப்பட்டு உள்ளன.
அவற்றில் சந்தேகநபர்களின் முகங்களை எளிதில் அடையாளம் காண முடியும். மேலும் போலீசாரின் உடலோடும் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை மற்றும் ஆயுதப்படை என சுமார் 60 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து புரசைவாக்கம் பாரிமுனை உள்ளிட்ட இடங்களிலும் இதே போல் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.