Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் 9 புதிய நீதிபதிகளை நியமிக்க…. மத்திய அரசு ஒப்புதல்….!!!!

உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்தது. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வுக் குழு கொலீஜியம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து கொலீஜியம்பரிந்துரைத்த மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நீதிபதிகள் நியமனம் தொடர்பான கோப்பை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கேரளா ஹைகோர்ட் நீதிபதி சி.டி ரவிக்குமார், கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி பி.வி.நாகரத்தினம்,சிக்கிம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.கே மகேஸ்வரி உள்ளிட்ட 9 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்கின்றனர்.

Categories

Tech |