Categories
உலக செய்திகள்

மர்ம நபரின் வெறிச்செயல்…. 4 பேர் பலியாகிய சோகம்…. உறுதி செய்த பிரபல நாட்டு அதிபர்….!!

மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 போலீஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தான்சானியா நாட்டில் தர் எஸ் சலாம் என்னும் வர்த்தகத் தலைநகர் அமைந்துள்ளது. அந்த நகரில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதரகத்தின் அருகில் யார் என்று அடையாளம் தெரியாத ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் தனியார் நிறுவனத்தின் தொழிலாளி ஒருவர் மற்றும் மூன்று போலீஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தினை தான்சானியா நாட்டின் அதிபர் ஹசன் உறுதி செய்துள்ளார்.

Categories

Tech |