கேரளாவில் ஓணம் மற்றும் முகரம் பண்டிகை முன்னிட்டு கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு விகிதம் 18 சதவீதத்தை கலந்துள்ளதால் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் கடைகள் மற்றும் வணிக மால்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி என்று அவர் கூறியுள்ளார்.