Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெண் மரணத்தில் மர்மம்…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…!!

உசிலம்பட்டி அருகே இளம்பெண் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர் மதுரை மாவட்டம் செக்கானூரணி பாறை பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மாளவிகா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது திருமணத்தின் போது பெண் வீட்டார் மாளவிகாவிற்க்கு 100 சவரன் தங்க நகை போடுவதாக கூறியுள்ளனர் திருமணத்தன்று 60 சவரன் நகை மட்டுமே போட்டதாகவும் மீதியை மூன்று மாதத்தில் தருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் திருமணம் முடிந்து ஆறு மாதம் ஆகியும் மீதி நகை வழங்காததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது மாளவிகா இறந்ததாக கூறி பிரகாஷ் குடும்பத்தினர் செக்கானூரணி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் மாளவிகாவின் குடும்பத்தார் வரதட்சணை கொடுக்காததால் மாளவிகாவை அடித்து கொலை செய்து விட்டு விட்டதாகவும் மாளவிகாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |