ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டுமென்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என நடிகர் விவேக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எம்ஜிஆர் நகரில் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு பள்ளிகளில் மரக்கன்று நடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது என்றார்.
இதேபோல தனியார் பள்ளி மாணவர்களையும் மரக்கன்றுகளை வளர்க்க ஊக்கபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று விவேக் குறிப்பிட்டுள்ளார்.